என்ன ஆகப்போகுதோ ஏப்ரல் மாதம்? வரிசை கட்டும் பேன் இந்தியா பட ரிலீஸ்கள்!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (10:55 IST)
ஏப்ரல் மாதத்தை குறிவைத்து பல சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் ரிலிஸூக்கு திட்டமிட்டு வருகின்றன.

கொரோனா மூன்றாம் அலையால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால ஜனவரி மாதம் ரிலீஸுக்கு திட்டமிட்டு இருந்த மெகா பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸீல் இருந்து பின்வாங்கின. இதனால் இந்த படங்கள் எப்போது ரிலிஸ் ஆக போகின்றன என்ற கேள்வி எழுந்த நிலையில் எல்லா படங்களும் ஏப்ரலை குறிவைத்துள்ளன.

ஏற்கனவே ஏப்ரலில் கே ஜி எப், அமீர்கானின் லால் சிங் சட்டா, விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளன. இந்நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் திரைப்படமும் ஏப்ரல் 28 ஐ தங்கள் ரிலிஸ் தேதிகளில் ஒன்றாக அறிவித்துளது. வலிமை படமும் அப்போதுதான் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஏப்ரல் மாதம் திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கல் எழ அதிக வாய்ப்புகள் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்