மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் ஷேஷு!

vinoth
வெள்ளி, 15 மார்ச் 2024 (13:29 IST)
சில வருடங்களுக்கு முன்பாக தமிழ் சின்னத்திரையுலகில் காமெடி தர்பார் நடத்திய லொள்ளு சபா நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். பல வெற்றிப் படங்களை கலாய்த்து அவர்கள் உருவாக்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்துதான் சந்தானம்,  மாறன், சேஷு, லொள்ளுசபா மனோகர், இயக்குனர் ராம் பாலா, முருகானந்த் ஆகியோர் திரைத்துறைக்குள் வந்தனர்.

இதில் ஷேஷு தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களைப் பல படங்களில் விழுந்து விழுந்து சிரிக்கவைத்துள்ளார். சந்தானத்துடன் இணைந்து அவர் ஏ1 மற்றும் சமீபத்தில் வந்த வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களில் காமெடி ரகளை நடத்தியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விரைவில் குணமாகி வரவேண்டுமென்று லொள்ளு சபாவில் அவரோடு நடித்த சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்