பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆன சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி!

vinoth

செவ்வாய், 12 மார்ச் 2024 (11:39 IST)
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்க, ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். குறிப்பிடத்தக்கது. சந்தானம் கார்த்திக் யோகி கூட்டணி ஏற்கனவே டிக்கிலோனா என்ற வெற்றிபடத்தைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த மாதம் அதிக அளவிலான திரைகளில் இந்த படம் ரிலீஸ் ஆனது. படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ரிலீஸுக்குப் பிறகு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் பெரியளவில் கலெக்‌ஷன் இல்லையாம்.

இந்நிலையில் இப்போது இந்த படம் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. ஓடிடியிலாவது இந்த படத்துக்கு பெரியளவில் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்