இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள கூலி படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் வெளியான போது அதில் ரஜினிகாந்த் பேசும்போது முடிச்சிர்லாமா? என்ற வசனம் கவனம் ஈர்த்தது. அது பற்றி பேசியுள்ள லோகேஷ் “கமல் சாருக்கு விக்ரம் படத்தில் ஆரம்பிக்கலாங்களா? என்ற வசனம் வைத்தோம். அதனால் இந்த படத்தில் ரஜினி சாருக்கு முடிச்சிர்லாமா என்று யோசித்தோம். அந்த வசனம் படத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அது இடைவேளையில் ஒரு முக்கியமன இடத்தில் வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.