நான் விஜய்யின் தீவிர ரசிகை! கரூர் சம்பவம் குறித்து காஜல் அகர்வால் சொன்ன பதில்!

Prasanth K

ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (11:09 IST)

கரூர் தவெக அசம்பாவிதம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு நடிகை காஜல் அகர்வால் பதில் அளித்துள்ளார்.

 

பிரபல நடிகையான காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் பல முக்கிய ஹீரோக்களுடன் நடித்துள்ள அவர் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என பல படங்களில் நடித்துள்ளார்.

 

சமீபத்தில் இவருக்கு திருமணமான நிலையில் இடையே நடிப்பை நிறுத்தியிருந்த காஜல் மீண்டும் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் சென்னையில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் காஜல் கலந்துக் கொண்டார்

 

அப்போது கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த அவர் “எல்லாரும் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை. அது வேறு களம். விஜய்யுடன் நான் நிறைய படங்கள் நடித்துள்ளேன். தனிப்பட்ட முறையில் நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்