கமலுக்காக உருவாக்கிய கதாபாத்திரத்தை நீக்கிய லோகேஷ் கனகராஜ்… ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (17:58 IST)
ரஜினிக்காக லோகேஷ் உருவாக்கிய கதையில் இப்போது கமல் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர் நேசன்ல் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தின் ஷீட்டிங் முடியாததாலும் கொரோனா காலம் முடிந்தவுடன் தான் ஷூட்டுங்கில் கலந்து கொள்வேன் என ரஜினி கூறியுள்ளதால் கமலே அந்த கதையில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது,

ஏற்கனவே ரஜினி கதாநாயகனாக நடிக்க இருந்த போது கமல் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினார் லோகேஷ் கனகராஜ். ஆனால் இப்போது கமலே அந்த கதாநாயகனாக நடிக்க இருப்பதால் கௌரவ தோற்ற கதாபாத்திரத்தை லோகேஷ் தூக்கி விட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்