மாஸ்டர் இயக்குனரை சிரிக்க வைத்த கொரோனா குமார்!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (16:08 IST)
இயக்குனர் கோகுல் சொன்ன கொரோனா குமார் கதை தன்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்ததாக கூறியுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ஜூங்கா ஆகிய படங்களையும் கார்த்தி நடித்த ’காஷ்மோரா’ படத்தையும் இயக்கியவர் இயக்குனர் கோகுல். இவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் கோகுல் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் கோகுல் இயக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் ’கொரோனா குமார்’. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும் இந்த படத்தில் குறைந்தபட்சம் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 

இந்நிலையில் இந்த படத்தின் கதையைக் கேள்விப்பட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் விரைவில் வெள்ளித்திரையில் காண ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்