மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் உள்பட 6 திரைப்படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்து விட்டதால் அடுத்தடுத்து அவருடைய படங்கள் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது . இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி இலங்கை தமிழராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து வெளிநாட்டுக்கு செல்லும் அவர் இசையமைப்பாளராக எப்படி மாறுகிறார் என்பதே கதையாம். விஜய் சேதுபதி ஜோடியாக மேகாஆகாஷ் நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர்கள் மோகன் ராஜா மற்றும் மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.