ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாக்கப்பட்டு தீபாவளி அன்று வெளியான சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அரசியலில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக படத்தில் அதுமுகவை விமர்சித்து பல நேரடி வசனங்கள் இருப்பதாகவும், மக்களுக்கு வழங்கிய இலவசங்கலிஅ எரிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் சர்கார் படத்தில் இருந்து இந்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டது.
படத்தில் இருந்து என்னென்ன காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்ற லிஸ்டும் வெளியாகியுள்ளது. நீக்கப்பட்ட காட்சிகள் பின்வருமாறு,
1. மிக்ஸி, கிரைண்டர் நெருப்பில் தூக்கி எரியப்படும் காட்சி
2. கோமளவல்லி என்ற உச்சரிப்பு வரும் போது கோமளா என்பது மியூட் செய்யப்பட்டுள்ளது
3. பொதுப்பணித்துறை மற்றும் 56 வருஷம் ஆகிய வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் 5 வினாடி காட்சி மட்டுமே படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த 5 வினாடி காட்சி நீக்கத்திற்காகத்தான் அதிமுகவினர் இத்தனை போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.