காலா படத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு கொலை மிரட்டல்

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (14:55 IST)
ரஜினி நடித்து வரும் காலா படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த உதவி இயக்குநருக்கு சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 


 

 
கபாலி வெற்றிப் படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் காலா. இந்த படத்தின் வேலைகளை துவங்கப்பட்ட நிலையில் ராஜசேகரன் என்பவர் காலா படத்தின் தலைப்பும், கதையும் தன்னுடையது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
வழக்கை வாபஸ் பெறக்கோரி மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ராஜசேகரன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்