விக்னேஷ் சிவன் & ப்ரதீப் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் அப்டேட்!

vinoth

செவ்வாய், 23 ஜூலை 2024 (17:20 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

முதலில் ப்ரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்கி வந்தார். இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ரவி வர்மன் தற்போது இந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வரும் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தின் டைட்டில் எல் ஐ சி என்ற பெயரில் இருந்து மாற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்