இன்று நள்ளிரவு தல அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (22:28 IST)
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் சாதனை செய்தது. ஃபர்ஸ்ட்லுக் வெளியான தினத்தில் சமூக இணையதளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரை தல ரசிகர்கள் தெறிக்க விட்டனர்.



 


இந்த நிலையில் உலக சாதனை செய்த 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை அடுத்து இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு இன்னொரு அட்டகாசமான ஸ்டில் ஒன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த செய்தி வெளியான அடுத்த நிமிடமே அஜித் ரசிகர்கள் விவேகம் நியூ போஸ்டர் என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் ஏற்படுத்தி அதை டிரெண்ட் ஆக்கியுள்ளனர். அஜித்தின் அட்டகாசமான போஸ்டரை இன்னும் சில நிமிடங்களில் இணையதளங்களில் பார்க்கலாம்
அடுத்த கட்டுரையில்