லியோ டிரைலரில் இடம்பெற்ற அந்த வார்த்தை தியேட்டரில் ம்யூட் செய்யப்படும்?

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (07:50 IST)
நேற்று முன் தினம் வெளியான விஜய்யின் டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்று வைரலானது. தற்போது வரை 30 மில்லியன்களுக்கு மேற்பட்ட ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த டிரைலரில் விஜய் ஒரு இடத்தில் ஆவேசமாக ஒரு மோசமான கெட்டவார்த்தையை பேசும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவில் குழந்தைகளை ரசிகர்களாகக் கொண்டுள்ள விஜய் தன் படத்தில் டிரைலரில் இப்படி பேசி இருப்பது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

டிரைலரில் இடம்பெற்ற அந்த கெட்டவார்த்தை திரையரங்கில் ம்யூட் செய்யப்பட்டுவிடும் என பலரும் கூறிவருகின்றனர். ஏனென்றால் தியேட்டருக்கான பிரதி சென்சார் செய்யப்பட்டுதான் வரும் என்பதால் அந்த வார்த்தை இடம்பெறாது. யுடியூபுக்கான டிரைலர் சென்சார் செய்யப்படாதது என்பதால் அந்த வார்த்தை இடம்பெற்றுவிட்டது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்