லியோ படத்துக்கான முன்பதிவு எப்போது… தயாரிப்பாளர் லலித் தகவல்!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (07:07 IST)
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று டிரைலர் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பக்கா ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக லியோ உருவாகி இருப்பதை டிரைலர் காட்டியுள்ளது.

இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் லலித் “லியோ படத்தின் முன்பதிவை தமிழ்நாட்டில் அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்க உள்ளோம். படத்துக்காக யாரும் எதிர்பார்க்காத ஒரு ப்ரோமோஷனை செய்ய உள்ளோம். லியோ படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை ரிலீஸுக்குப் பின்னர் தொடர்ந்து வெளியிடுவோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்