5 நிமிடத்தில் 1 மில்லியன்.... 15 நிமிடத்தில் 2 மில்லியன் வியூஸை கடந்த 'லியோ' டிரைலர்

வியாழன், 5 அக்டோபர் 2023 (18:51 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் லியோ.
 
இப்படத்தை  லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 
 
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து  செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.
 
இந்நிலையில் லியோ படத்திற்கு   நேற்று சென்சார் சான்றிதழ் வழங்கினர். அதன்படி, இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், லியோ பட டிரைலர் அறிவித்திருந்தபடி  இன்று மாலை 6: 30 மணிக்கு  சன் டிவியின் யூடியூப் சேனலில் ரிலீஸாகி உள்ளது.

இதில்,அதிரடி மாஸ் ஆக்சன் காட்சிகளில் விஜய் நடித்துள்ளார். மன்சூர் அலிகான்,சஞ்சய்தத், திரிஷா,அர்ஜூன் என எல்லோருடைய பெர்பாமஸ்ன்சும் ரசிக்கும்படி உள்ளது. இதில், இரட்டை வேடத்தில் ரசித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த டிரைலரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், லியோ பட டிரைலர் வெளியான 5 நிமிடத்தில் 1 மில்லியன் வியூஸை பெற்றது. அடுத்த 15 நிமிடங்களில் 21 லட்சம் வியூஸை( 2 மில்லியன்) கடந்துள்ளது.

அனிருத்தின் இசையில், அன்பறிவின் ஸ்டண்டில் விஜய்யின் அதிரடி ஆக்சனில், சஞ்சய் தத், அர்ஜூனின் அசத்தல் நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தியேட்டரில் காண்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள டிரைலர் தமிழ், இந்தி, தெலுங்கு கன்னட ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.  அனைத்து மொழிகளிலும் 5 மில்லியன் வியூஸை கடந்துள்ளது  இந்த டிரைலர் . இது மேலும் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது

லியோ  பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்