ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் முதல் காட்சியில் இருந்தே எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என சொல்லப்பட்டது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் ரிலீஸூக்குப் பிறகு படுதோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் சில முக்கியமானக் காட்சிகள் இருந்த ஹார்ட் டிஸ்க் தொலைந்துபோனதுதான் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த படம் குறித்து ரிலீஸுக்குப் பின்னர் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,”லால் சலாம் படத்தின் இயக்குனர் கட் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகும். தொலைந்துபோன காட்சிகளை எல்லாம் கண்டுபிடித்து அதில் சில காட்சிகளை சேர்த்துள்ளோம். தியேட்டரில் பார்த்ததை விட இந்த வெர்ஷன் வேறு விதமாக இருக்கும். இதுதான் நான் உருவாக்கிய கதைப்படி இருக்க வேண்டிய படம்” எனக் கூறியிருந்தார்.