குமரி மண்ணின் மணம் கமழும் "கும்பாரி"! - திரை விமர்சனம்

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (12:07 IST)
ராயல் எண்டர் பிரைசஸ் சார்பில் பறம்பு குமாரதாஸ் தயாரித்து கெவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "கும்பாரி"


 
இத்திரைப்படத்தில் அபி சரவணன், மஹானா,ஜான் விஜய்,மதுமிதா, காதல் சுகுமார் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். எந்த ஒரு உறவுகளும் இல்லாத ஆதரவற்ற இரண்டு பேர் சிறு வயதிலிருந்து நட்பாக பழகி மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து  வருகிறார்கள்.

இந் நிலையில் தான் வசிக்கும் ஊரில் நாயாகி (மஹானா)வை ஒரு ரவுடிக் கும்பல் துரத்துகிறது. அவள் கண்ணில் படுபவர்கள்  எல்லாரிடமும்  உதவி கேட்கிறாள் யாரும் உதவ முன்வரவில்லை

இந்த ரவுடி கும்பல் நாயகி (மஹானா)வை துறத்துவதை பார்த்த நாயகன்(அபி சரவணன்)அந்த  கும்பலை அடித்து நொறுக்குகிறார். அடி வாங்கிய அவர்களோ திருப்பி அடிக்காமல்  அடியை மட்டும்  வாங்கி கொள்கிறார்கள்.

நாயாகி அடித்தது போதும் விடுங்கள் என்று சிரிக்க ஒன்றும் புரியாமல் நிற்கிறார் நாயகன். இது ஒரு பிராங்க் ஷோ என்று நாயகி கூற  கொதித்தெழுந்த  நாயகன் பளார் என்று ஒரு அரை விடுகிறார். வாங்கிய அடியால் மறு நொடியே  நாயகன்  மீது காதலாக மலர்கிறது

இந்நிலையில் அவள் காதலுக்கு அண்ணன் எதிர்ப்பு தெரிவிக்க காதல் ஜோடி ஊரை விட்டு ஓட அதன்பிறகு அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான்  கும்பாரி’ படத்தின் கதை.

கும்பாரி என்றால் குமரி மண்ணின்  மீனவ மக்களிடம் நண்பன் என்று அர்த்தம்  ஒரு காதல் கதை  என்றாலும் நட்பை பற்றியும் குமரி மண்ணின் அழகும், மண்மணம் மணக்கும் மொழியை பற்றியும் பேசியிருக்கிறார் இயக்குனர் கெவின்.

கேரளாவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதி  கன்னியாகுமரி முட்டம் போன்ற கடற்கரை பகுதி போன்ற இடங்களில் படபிடிப்பை அழகாக  படம் பிடித்துள்ளார் பிரசாத் ஆறுமுகம்.

ஜெய்பிரகாஷ், ஜெய்சன்,பிரித்வி ஆகியோர் படத்திற்கு இசையை அருமையாக அமைத்துள்ளனர்

அடி விழாமல் சண்டையிடுவது  எப்படி என்று சண்டை  காட்சிகள்  மிராக்கில் மைக்கேல்  மிராக்கல் செய்துள்ளார். மொத்தத்தில் "கும்பாரி" திரைப்படம் குமரி மண்ணின் மணம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்