"பார்க்கிங்" திரை விமர்சனம்!

வியாழன், 30 நவம்பர் 2023 (19:09 IST)
சுதன் சுந்தரம்,கே எஸ் சினிஷ் ஆகியோரது தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி ஹரிஸ் கல்யாண் நடித்து வெளி வந்த திரைப் படம் "பார்க்கிங்".


இத்திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ரமா ராஜேந்திரா, ப்ராதனா நாதன், இளங்கோ, இளவரசு உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். தனியார் ஜ.டி நிறுவனத்தில் வேலை செய்துவரும் ஹரிஸ் கல்யாண் தனது மனைவியுடன் புதிதாக ஒரு வீட்டின் மேல்மாடியில் வாடகைக்கு குடியேறுகிறார்.

அங்கு ஏற்கெனவே தனது குடும்பத்தினருடன் குடியிருக்கிறார் அரசு ஊழியரான  எம்.எஸ்.பாஸ்கர். ஆரம்பத்தில் இரு குடும்பங்களுக்கும் இடையில் நல்ல ஒரு  உறவு இருந்து வந்தது. தனது மனைவிக்காக புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஹரிஸ் கல்யாண்.

ஹரிஸ் கல்யாணின் காரை பார்க்கிங்கில் நிறுத்துவதால் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்த முடியாமல் அவதிப்படும் எம்.எஸ்.பாஸ்கர்  கோபமடைகிறார். அந்த கோபம் ஒரு கட்டத்தில்  இருவருக்குமிடையேயான மோதலாக உருவாகிறது. பார்க்கிங் பிரச்னை தீர்ந்ததா இல்லையா?  இதனால் என்ன என்ன விளைவுகளை சந்தித்தார்கள்? என்பதே பார்க்கிங் திரைப்படத்தின் கதை.

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட தன் மனைவியை அன்பாக பார்த்து கொள்வதிலிருந்து  கோபத்தில் வயதானவரைத் தாக்குவதும். மனைவி இந்துஜாவிடம் கோபப்படும் காட்சிகள்  பழிவாங்குவதற்காக எம்.எஸ்.பாஸ்கரை பிரச்னையில் மாட்டிவிட்டு தனது பகையை தீர்க்கும் காட்சி வரை  தனது நடிப்பில் அசத்தியுள்ளார் ஹரிஸ் கல்யாண்.

இளைஞனிடம் சரிக்கு சமமாக சண்டையிடுவதும் குடும்ப தலைவராக தன் பெண் பிள்ளை எதிர்காலம் கருதி சிக்கனமாக இருப்பதும் தனது காதபாத்திரம் என்ன என்று அதற்கேற்றார் போல தனது அனுபவ நடிப்பை காட்டியுள்ளார் எம்.எஸ்.பாஸ்கர்.

தன்னுடைய கணவர் தனக்கு சட்னி அரைக்கு மிக்ஸி வாங்கிக் கொடுக்கவில்லை என கோபப்படும்  சில இடங்களில் நமக்கு சிரிப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் குடும்ப பெண்களின் கஷ்டங்களை காட்சி மூலம் பதிவு படுத்தி சிறப்பாக நடித்துள்ளார் ரமா.

தந்தை மீது கோபம் கொள்ளும் ப்ராதனா நாதன் நடிப்பு பிரமாதம். கணவன் மீது அன்பு பாசம் வருத்தம் கோபம் என அனைத்தும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார் இந்துஜா. நல்ல கதையம்சத்துடனும்  விறுவிறுப்பான காட்சிகளுடன் முதல் படத்திலயே தனது திறைமைய காட்டி அசத்தியுள்ளார் இயக்குநர் ராம்குமார். சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவு  காட்சிகள் படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது.

மொத்தத்தில் "பார்க்கிங்" திரைப்படம் விறுவிறுப்பு!!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்