"கன்ஜூரிங் கண்ணப்பன்"- திரை விமர்சனம்!!

சனி, 9 டிசம்பர் 2023 (19:56 IST)
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் "கன்ஜூரிங் கண்ணப்பன்".


இத்திரைப்படத்தில் சதீஷ், ரெஜினா, ஆனந்த்ராஜ், சரண்யா, நாசர்,ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி   உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். கேமிங் துறையில் வேலை தேடி கொண்டிருக்கும் கதாநாயகன்  அவசரமாக இன்டர்வியூக்கு செல்ல இருக்கும் நேரத்தில் தனது வீட்டில் தண்ணீர் வராத காரணத்தால் அவர் வீட்டில் ரொம்ப நாளாக மூடி வைத்திருக்கும் ஒரு கிணற்றின் பூட்டை திறந்து அதில் தண்ணீர் எடுக்கின்றார்.

அந்த சமயம் அதில் ட்ரீம் கேட்சர் என்னும் ஒரு பொருள் அவரிடம் கிடைக்கிறது. அந்த ட்ரீம் கேச்சேரியில் சூனியம் செய்து வைத்திருப்பது அவருக்கு தெரியாமல்  ரெக்கை ஒன்றை எடுத்து விடுகிறார். இதனால் எப்போதெல்லாம் அவர் தூங்க செல்கிறாரோ, அப்போதெல்லாம் கனவு உலகத்தில்  பேயிடம் சிக்கிக் கொள்கிறார்.

கதாநாயகன் சதீஸ் சிக்கிக்கொண்டது மட்டுமில்லாமல் அவரது தாய், தந்தை, மாமா மற்றும் ஆனந்த்ராஜ்,ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் வாலன்டியராக ட்ரீம் கேச்சரில் இருந்த ரெக்கையை பிடிங்கி கனவு உலகத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் இவர்கள்  அனைவரும் சந்தித்த போராட்டங்கள்  என்ன,இதிலிருந்து எப்படி  தப்பித்தார்கள்  என்பதே இப்படத்தின் கதை.

கதாநாயகன் சதீஸ் நகைச் சுவையுடன் கலந்து  தனது நடிப்பு திறமையை காட்டியுள்ளார். சரண்யா மற்றும் ஆனந்த்ராஜ் நடிப்பு அட்டகாசம் ரெடின் கிங்ஸ்லி பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். விடிவி கணேஷ், நமோ நாராயணன், நாசர் மற்றும் ரெஜினா ஆகியோர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கேற்றார் போல சிறப்பாக நடித்துள்ளனர்.

பேயாக நடித்த நடிகை எல்லி அவ்ரம் பேயாகா நடிக்க முயற்சித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை சிறப்பு. வழக்கமான பேய் திரைக்கதையை விட இத் திரைப்படம் வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாக்கி யிருக்கிறார். இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர். படத்தின் முதல் பாதி விறு விறுப்பாக சென்றது  இரண்டாம் பாதியில் விறு விறுப்பு சற்று குறைவானலும் நகைச்சுவை படத்திற்கு  கைகொடுத்துள்ளது.

மொத்தத்தில் "கன்ஜூரிங் கண்ணப்பன் "குழந்தைகள் பயப்படாமல் பார்க்கும் பேய் திரைப்படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்