குய்கோ படத்தை அதன் தயாரிப்பாளர்களே ப்ரீசர் பாக்ஸில் வைத்து விட்டார்கள்… இயக்குனர் புலம்பல்!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (09:33 IST)
யோகி  பாபு, விதார்த், இளவரசு, ஸ்ரீபிரியங்கா, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் குய்கோ படத்தை பத்திரிக்கையாளர் அருள்செழியன் இயக்கியுள்ளார். படத்துக்கு அந்தோனிதாசன் இசையமைத்துள்ளார். வெளிநாட்டில் வேலை செய்யும் மகன் தன் தாயின் இறப்புக்காக வருகையில், தன் தாயின் உடலை கெட்டுபோகாமல் பதப்படுத்தி வைத்திருந்த பிரீஸர் பெட்டியை கவனமாக பார்த்துக்கொள்ள, அது ஒரு கட்டத்தில் காணாமல் போகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை என இயக்குனர் கூறியுள்ளார்.

இந்த படம் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆனாலும் திரையரங்கில் பெரிதாக இந்த படத்துக்குக் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அருள்செழியன் படம் பற்றி முகநூலில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பதிவில் “குய்கோ திரைப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...  ரசிகர்களின் ஆதரவு இருந்தும் , பாராட்டுகள் குவிந்தும் குய்கோவை தயாரித்த நிறுவனத்தினர் அதை வலுக்கட்டாயமாக 'ஃபீரிசர் பாக்சில்' வைத்து ஆணி அடித்து, உயிரோடு அஞ்சலிக்கு வைத்து விட்டார்கள்..  'குய்கோ'விற்கு என் வீர வணக்கம்..  

பிகு: துணை நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி பதிவு மூன்றாம் நாள் காரியம் முடிந்ததும் வெளியிடப்படும். . .” என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்