பாசிட்டிவ் விமர்சனங்களை பெறும் யோகிபாபுவின் குய்கோ!

சனி, 25 நவம்பர் 2023 (14:41 IST)
யோகி  பாபு, விதார்த், இளவரசு, ஸ்ரீபிரியங்கா, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் குய்கோ படத்தை பத்திரிக்கையாளர் அருள்செழியன் இயக்கியுள்ளார். படத்துக்கு அந்தோனிதாசன் இசையமைத்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை செய்யும் மகன் தன் தாயின் இறப்புக்காக வருகையில், தன் தாயின் உடலை கெட்டுபோகாமல் பதப்படுத்தி வைத்திருந்த பிரீஸர் பெட்டியை கவனமாக பார்த்துக்கொள்ள, அது ஒரு கட்டத்தில் காணாமல் போகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை என இயக்குனர் கூறியுள்ளார்.

இந்நிலையில் திடீரென இப்போது இந்த வார ரிலீஸில் குய்கோ திரைப்படமும் இணைந்துள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் ரிலீஸான படங்களில் குய்கோ திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நகைச்சுவைக் காட்சிகளும் வசனங்களும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதாக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்