நான் ஹீரோன்னு சொன்னதும் 50 ஹீரோயின்கள் வேண்டாம்னு சொன்னாங்க… KPY பாலாவின் Sympathy பேச்சு!

vinoth

வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (06:01 IST)
விஜய் டிவில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் பாலா. தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் பாலா, ஏழை எளிய மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வருகிறார்.குக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை, பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் என பாலா செய்து வரும் உதவிகள் தினம் தோறும் ட்ரெண்டாகி வருகின்றன.

இப்போது பாலா கதாநாயகனாக ‘காந்தி கண்ணாடி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்க, விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகும் அறிவித்துள்ளனர். அதே தேதியில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாலா வழக்கமான தன்னுடைய நகைச்சுவைப் பேச்சுக்குப் பதிலாக ரசிகர்களிடம் sympathy ஐ உருவாக்கும் விதமாகப் பேசியுள்ளார். அதில் “இந்த படத்துக்காக ஹீரோயின்கள் தேடும்போது யாரு ஹீரோன்னு கேப்பாங்க. என் பேர சொன்னதும் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. அப்படி 50 ஹீரோயின்கள் ரிஜெகட் பண்ணாங்க. 51 ஆவதாக வந்த நமீதா கிருஷ்ணமூர்த்திதான் நடிக்க சம்மதிச்சாங்க” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்