மதராஸி படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள்… KPY பாலா நம்பிக்கை!

vinoth

புதன், 27 ஆகஸ்ட் 2025 (14:22 IST)
விஜய் டிவில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் பாலா. தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் பாலா, ஏழை எளிய மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வருகிறார்.குக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை, பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் என பாலா செய்து வரும் உதவிகள் தினம் தோறும் ட்ரெண்டாகி வருகின்றன.

இப்போது பாலா கதாநாயகனாக ‘காந்தி கண்ணாடி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்க, விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகும் அறிவித்துள்ளனர். அதே தேதியில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘மதராஸி’ படத்துடன் மோதுவது குறித்து பேசியுள்ள பாலா “மதராஸி படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள் என்று என சிலர் சமாதானம் செய்தனர். சிவகார்த்திகேயனோடு என்னை யாரும் ஒப்பிடவேண்டாம். அவர் இருக்கும் உயரம் வேறு. நான் இருக்கும் இடம் வேறு.” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்