ஒதுங்கிய விஜய் ஆண்டனி… சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தோடு மோதும் KPY பாலா!

vinoth

வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (08:56 IST)
விஜய் டிவில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் பாலா. தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் பாலா, ஏழை எளிய மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வருகிறார்.குக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை, பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் என பாலா செய்து வரும் உதவிகள் தினம் தோறும் ட்ரெண்டாகி வருகின்றன.

அதே சமயத்தில் பாலா சினிமாவில் ஹீரோவாக ஆகவேண்டும் என்பதற்காகதான் இப்படி செய்யும் உதவிகளை பப்ளிசிட்டி பண்ணிக் கொள்கிறார் என்று அவர் மேல் விமர்சனங்களும் எழாமல் இல்லை. அதற்கேற்றார் போல நடிகர் ராகவா லாரன்ஸ் பாலாவை தான் ஹீரோவாக்க உள்ளதாகவும், அதற்காக யாராவது நல்ல கதை வைத்திருந்தால் என்னை அணுகவும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது பாலா கதாநாயகனாக ‘காந்தி கண்ணாடி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்க, விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகும் அறிவித்துள்ளனர். அதே தேதியில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த தேதியில் ரிலீஸாவதாக இருந்த விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’  செப்ட்ம்பர் 19 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்