வெங்கட் பிரபு படத்தை உறுதி செய்த ஹீரோ!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (14:56 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு படத்தை அடுத்து இயக்கப்போகும் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது அடுத்த படத்தின் வேலைகளை இறங்கியுள்ளார். அடுத்த படமாக இப்போது கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று சொல்லப்பட்டது. இந்த படத்தை தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாக்க உள்ளதாக சொல்லப் படுகிறது.

இந்நிலையில் இப்போது இதை கிச்சா சுதீப் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ‘எனது அடுத்த படத்தை மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்குகிறார். எனக்கான நல்ல கதைகள் எனது மாநிலத்திலும் அண்டை மாநிலங்களில் இருந்தும்தான் வருகின்றன’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்