சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் நிலவரம்!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:11 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்களில் கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனா வைரஸ்கள் பரவல் அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறித்து தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சென்னையில் உள்ள 1,158 தெருக்களில் கொரோனா உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டையில் தொற்று அதிகமாக உள்ளது. தேனாம்பேட்டையில் 228 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. 988 தெருக்களில் 3க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்