ஆம், பிரபுவுடன் உறவு இருந்தது உண்மைதான்: குஷ்பு ஓப்பன் பேட்டி

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (14:01 IST)
கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரபுவும் குஷ்புவும் காதலிப்பதாகவும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் சிவாஜி குடும்பத்தினர்களின் முயற்சியால் இந்த ஜோடி பிரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் குஷ்பு, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டது தெரிந்ததே.
 
இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த குஷ்பு, பிரபுவுடனான உறவு குறித்து கூறியதாவது:                    
 
'ஆமாம், பிரபுடன் எனக்கொரு அழகான உறவு இருந்தது. அது மிக அழகான தருணம். அந்தத் தருணம் ஒரு சமயத்தில் முடிவுற்றது. அதற்குப் பிறகு சுந்தர் சி எனும் அழகான தருணம் என் வாழ்வில் மலர்ந்திருக்கிறது. இப்போது இது தான் நிஜம். குஷ்பூ, சுந்தர் சி உறவு தான் நிலையானது. இதை யாராலும் பிரிக்க முடியாது. பிரபுவுடனான நினைவுகளை இப்போது பகிர்ந்து பேரன், பேத்தி எடுத்து சந்தோஷமான மனநிலையிலிருக்கும் அவரை ஏன் சங்கடப் படுத்த வேண்டும். எனக்கும் 18 வயதில் மகளிருக்கிறார். எங்கள் வாழ்க்கையும் மிக அழகான தருணங்களால் நிறைந்திருக்கிறது. வாழ்வில் பல அழகான தருணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பிரபுவுடனான நட்பும் அப்படியொரு தருணம் எனச் சொல்வேன். ஆனால் அது முடிந்து விட்டது. 
 
சுந்தர் என்னை புரபோஸ் செய்யும் போதே திருமணத்தை மனதில் வைத்து தான் புரப்போஸ் செய்தார். அது எனக்குப் பிடித்திருந்ததால் நான் உடனே சம்மதித்தேன். ஆனாலும் எங்களது திருமணம் உடனே நடந்து விடவில்லை. ‘ஒரு நடிகையான உனக்கு செளகர்யமான வாழ்க்கைமுறை அமைத்துத் தரும் அளவுக்கு நான் எப்போது பொருளாதார வசதி அடைவேனோ அப்போது நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என சுந்தர் கூறியிருந்தார். அதன்படி 1999 ல் அவர் சொந்த வீடு கட்டினார். அவர் எதிர்பார்த்த பொருளாதார வசதிகளை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். உடனே அடுத்த வருடமே 2000 ல் எங்களது திருமணம் நடந்தது.' இவ்வாறு குஷ்பு அந்த பேட்டியில் கூறியிருந்தார்
 
பிரபுவும் குஷ்புவும் இணைந்து தர்மத்தின் தலைவன், வெற்றி விழா, சின்னத்தம்பி, பாண்டித்துரை, மை டியர் மார்த்தாண்டன், கிழக்குக்கரை, சின்ன வாத்தியார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தனர் என்பதும் இதில் சின்னத்தம்பி திரைப்படம் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்