சலார் படத்துக்கு இருக்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு… ஆனாலும் பிடிவாதமாக இருக்கும் தயாரிப்பாளர்!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (07:59 IST)
பாகுபலி இரண்டு பாக படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.

ஆனால் அதற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய இரு படங்களும் தோல்வி படங்களாக அமைந்தன. அடுத்து அவர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் ரிலீஸாக உள்ளது. ஆனால் அந்த படத்துக்குக் கூட மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை.

பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கேஜிஎப் இயக்குனரும் பாகுபலி ஹீரோவும் இணைந்துள்ள சலார் திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமைக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருந்தாலும், இன்னமும் அதை தயாரிப்பாளர் விற்கவில்லையாம். ஏனென்றால் இந்த படத்தின் ரிலீஸின் போது உருவாகும் ஹைப்பை கொண்டு அப்போது பெரிய விலைக்கு விற்று லாபம் பார்க்க முடிவு செய்துள்ளாராம். பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் எல்லாம் பூஜை போட்டதும், அனைத்து உரிமைகளையும் விற்றுக் காசாக்கி, அதை வைத்துதான் ஷூட்டிங்கே நடத்துகிறார்கள். ஆனால் இந்த தயாரிப்பாளரின் அனுகுமுறை வித்தியாசமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்