கையில் வாள், முகத்தில் தழும்பு! அதிர வைத்த அதீரா! – கேஜிஎஃப் 2 போஸ்டர்!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (11:01 IST)
கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் முக்கிய வில்லன் பாத்திரமான அதீராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

கன்னட ஆக்‌ஷன் ஸ்டார் யஷ் நடிப்பில் 2018ல் வெளியான படம் கேஜிஎஃப். தங்க சுரங்கத்தை மையமாக கொண்ட அனல் பறக்கு ஆக்‌ஷன் கதையாக இதை எழுதி இயக்கி இருந்தார் பிரசாத் நீல். கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியான இந்த படமும், இதன் பாடல்களும் இந்தியா முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இந்தியாவில் மட்டுமல்லாது சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது கேஜிஎஃப் அத்தியாயம் ஒன்று.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலர் தீவிரமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இரண்டாம் அத்தியாயத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தில் முக்கியமான வில்லன் கதாப்பாத்திரமான அதீராவாக சஞ்சய் தத் நடித்துள்ளார். இன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாளில் அவரது அதீரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கையில் வாளுடன், முகத்தில் பச்சைக் குத்திக்கொண்டு ஒரு போர்வீரனை போல உள்ள அதீரா போஸ்டர் ட்ரெண்டாகியுள்ளது.

இன்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக பலர் ஆர்வமாக சொல்லி வந்த நிலையில் ஏமாற்றம் ஏற்பட்டாலும் அதை ஈடு செய்யும் விதமாக அதீராவின் அட்டகாச போஸ்டர் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்