கேரள ரசிகர்களுக்கும் ‘மெர்சல்’ தீபாவளி தான்…

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (18:42 IST)
விஜய் நடித்துவரும் ‘மெர்சல்’ படத்தின் கேரள விநியோக உரிமை விற்பனையாகியுள்ளது.


 

 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக கேரளாவில் தான் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே, ‘மெர்சல்’ படத்துக்கு கேரளாவில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில், குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம் ‘மெர்சல்’ படத்தின் கேரளா விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது. ‘பாகுபலி’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை கேரளாவில் இந்த நிறுவனம்தான் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ‘மெர்சல்’ படத்தையும் வெளியிட உள்ளது.
அடுத்த கட்டுரையில்