உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ ரிலீஸ்… படம் பற்றி கீர்த்தி சுரேஷின் டிவீட்!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (15:50 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த இந்த படத்தின் சிறப்புக் காட்சியை மாமன்னன் படக்குழுவினர் பார்த்தனர். இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோருக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் இன்று படம் ரிலீஸாகியுள்ள நிலையில் நடிகை கீர்த்தி படத்தைப் பாராட்டி டிவீட் செய்துள்ளார். அதில் “அழகான படம். உதயநிதி எளிமையாக தனது வேடத்துக்கான பெருமையை சேர்த்துள்ளார். தற்காலத்துக்கு நெருக்கமான ஒரு படத்தைக் கொடுத்தற்கு நன்றி போனி கபூர் சார். மாமன்னன் படக்குழுவினர் சார்பாக வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்