கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ ரிலீஸ்… கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு!

vinoth

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (11:00 IST)
ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துப் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார் கீர்த்தி சுரேஷ். அதே நேரம் தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள ’நடிகையர் திலகம்’ மற்றும் ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘ரகுதாத்தா’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தென்னிந்திய சினிமாத் தாண்டி அவர் பாலிவுட்டிலும் ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் கால்பதித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்தபடம் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் தொடர்ந்து அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்லிடையில் அவர் நடித்து சில ஆண்டுகள் ஆகியும் ரிலீஸாகாமல் இருந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கபப்ட்டுள்ளது. இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்