ராம்சரணுக்கெல்லாம் அம்மாவா நடிக்கக் கூப்புடுறாங்க.. புலம்பித் தள்ளும் ‘லப்பர் பந்து’ நடிகை!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (09:45 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக சொல்லப்பட்டது. இந்த படம் வெறும் ஐந்தரை கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்த ஸ்வாசிகா அதன் பின்னர் கவனிக்கப்படும் நடிகையாகி தற்போது பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூரியின் ‘மாமன்’ திரைப்படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.

இந்நிலையில் தனக்கு வரும் வாய்ப்புகள் பற்றிப் பேசியுள்ள அவர் “நிறையப் படங்களில் அம்மா வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதில் ராம்சரணுக்கு அம்மாவாக நடிக்க ‘பெட்டி’ படக்குழுவினர் அழைத்ததுதான் அதிர்ச்சியாக இருந்தது. உடனே அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்