சரத்குமார், ஜீவா நடிப்பில் உருவாகும் ‘சூர்யவம்சம் 2’… இயக்குனர் விக்ரமன் இல்லையா?

vinoth

புதன், 16 ஜூலை 2025 (10:58 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் வெற்றி பெற்ற படங்களில் ‘சூர்யவம்சம்’ திரைப்படத்துக்கு முக்கிய இடம் உண்டு. சரத்குமாரை ஒரு மிகப்பெரிய ஸ்டார் நடிகர் ஆக்கியதில் இந்த படத்துக்கு பெரும்பங்கு உண்டு. 1997 ஆம் ஆண்டு ரிலீஸான இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது. திரையரங்கில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்தது. இன்றளவும் தொலைக்காட்சி, யுட்யூப் என ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் 25 ஆம் ஆண்டு விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதில் சரத்குமார் மற்றும் ஜீவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

ஆனால் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய விக்ரமன் இயக்கப் போவதில்லையாம். பிரபுசாலமனின் இணை இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்