துளிகூட மேக்கப் இன்றி எண்ணெய் வடியும் முகத்துடன் கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம்!

செவ்வாய், 28 ஜூலை 2020 (07:08 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று முன்னணி  தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து  முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் தாவிவிட்டார்.


இதற்கிடையில் தனது உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆன தோற்றத்திற்கு மாறிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் துளி கூட மேக்கப் போடாமல் வெளியிட்ட போட்டோ ஒன்றை இணையத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது. கீர்த்தி இந்த போட்டோவில் ரொம்ப ஒல்லியாக இருப்பதாகவும் அவரது கொழு கொழு கன்னங்களை மிஸ் செய்வதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்