உன் அப்பன் காசிலயா சாப்புட்றேன்… ரசிகரின் கமெண்டால் கோபமான பிக்பாஸ் பிரபலம்!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (10:50 IST)
நடிகை சாக்‌ஷி அகர்வால் தன்னுடையப் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர அதில் ரசிகர் ஒருவர் எல்லை மீறி கமெண்ட் செய்ய கடுப்பாகியுள்ளார் சாக்‌ஷிஅகர்வால்.

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை சாக்‌ஷி அகர்வாலும் ஒருவர். இவருக்கு கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் சீசன் 3 பரபரப்பாக ஓடியது. பின்னர் இருவரும் பிரிந்தனர். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் சாக்‌ஷி அவ்வப்போது தன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அப்படி சமீபத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த போது, அதில் ஒரு ரசிகர் எல்லை மீறி ‘குண்டம்மா… முதலில் உன் தொப்பையைக் குறை’ என கமெண்ட் செய்தார்.

இதனால் கடுப்பான சாக்‌ஷி பதிலுக்கு ‘உன் அப்பன் காசிலயா சாப்பிட்றன்.. போடா டேய்’ என பதிலளிக்க காணாமல் போனார் அந்த துடுக்கு வாய் ரசிகர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்