ஜெர்ஸி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த இந்த படம் நேற்று ரிலீஸான நிலையில் ரிலீஸுக்குப் பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஏற்கனவே பார்த்து சலித்துப்போன கதையை எடுத்து வைத்துள்ளதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். ரெட்ரோ மற்றும் சலார் போன்ற படங்களை நினைவூட்டுவதாக உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இதனால் இந்த படம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சிக்கு 60 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ரவி கிரண் கோலா இயக்குகிறார். படத்தைத் தில் ராஜு தயாரிக்கிறார்.