நஷ்டத்தை நோக்கி விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’… விற்பனை ஆகாத சேட்டிலைட் உரிமை!

vinoth

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (13:54 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக முன்னேறி வந்த விஜய் தேவரகொண்டா சமீபகாலமாக தொடர்ச்சியாக தோல்வி படங்களாகக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவான ‘கிங்டம்’ திரைப்படம் ஆகஸ்ட்ர் 1 ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

ஜெர்ஸி புகழ் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவான இந்த  இந்த படம் நேற்று ரிலீஸான நிலையில் ரிலீஸுக்குப் பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஏற்கனவே பார்த்து சலித்துப்போன கதையை எடுத்து வைத்துள்ளதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். ரெட்ரோ மற்றும் சலார் போன்ற படங்களை நினைவூட்டுவதாக உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இதன் காரணமாக மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தும் அதன் பின்னர் வசூலில் சுணக்கம் கண்டுள்ளது கிங்டம். இதனால் இந்த படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய அளவில் நஷ்டத்தை உருவாக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தின் சாட்டிலைட் வியாபாரமும் இன்னும் முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்