8 மணிநேர வேலை நேரம் குறித்த சர்ச்சைக்கு காட்டமாக பதிலளித்த தீபிகா படுகோன்!

vinoth

சனி, 11 அக்டோபர் 2025 (10:44 IST)
ஷாருக் கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தீபிகா படுகோன். அந்த படத்தின் இமாலய வெற்றியை அடுத்து பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

சக நடிகர் ரண்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தொடர்ந்து சினிமாவில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அட்லி- அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகிவரும் பிரம்மாண்டமானப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ‘ஸ்பிரிட்’ மற்றும் ‘கல்கி 2’ ஆகிய படங்களில் இருந்து அவர் விலகினார் (அல்லது நீக்கப்பட்டார்). அதற்குக் காரணம் தினமும் 8 மணிநேரம் மட்டும்தான் பணியாற்றுவேன் என்று நிபந்தனை வைத்ததுதான் காரணம் என சொல்லப்பட்டது. இது குறித்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ள தீபிகா “இந்திய சினிமாவில் பல ஆண் நடிகர்கள் பல ஆண்டுகளாக 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுகிறார்கள். அதே போல வார இறுதி நாட்களிலும் ஷூட்டிங் வருவதில்லை. ஆனால் நான் 8 மணிநேரம்தான் பணியாற்றுவேன் என சொன்னால் அது பெரிதாக செய்தியாக்கப்படுகிறது.

சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகைகள் சிலர் கூட 8 மணிநேரம்தான் பணியாற்றுகிறார்கள். அது கூட செய்தியாவதில்லை. இந்திய சினிமாவில் என்ன பிரச்சனையென்றால், அது வரையறுக்கப்பட்டு ஒழுங்காக செயல்படும் தொழில் அல்ல. அதை ஒழுங்கு படுத்தப்படும்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்