சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் பிரியங்கா மோகன். அந்த படத்தின் வெற்றிக்கு அவரின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார்.
அடுத்தடுத்து தமிழில் எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார். ஆனால் அவருக்க்ய் சரியான ஹிட் அமையவில்லை. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இவர் நடனமாடிய கோல்ட ஸ்பேரோ என்ற பாடல் வைரல் ஹிட்டானது. தமிழைப் போலவே தெலுங்கிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
பவன் கல்யாணின் They call him OG படத்தில் நெருக்கமானக் காட்சிகளில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா மோகன் கவர்ச்சியான உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவின. இந்நிலையில் “போலி படங்களை பகிர்வதை நிறுத்துங்கள். AI மூலமாக உருவாக்கப்பட்ட போலியான புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. AI என்பது படைப்பாற்றல் நிறைந்த செயல்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக AI மூலமாக இதுபோல புகைப்படங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன என்பது கவலைக்குரிய விஷயமாகும்.