சில ஆண்டுகளுக்கு முன்னால் சிம்பு நடிப்பில் இரண்டு படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் ஆனார் ஐசரி கணேஷ். அதற்கான சம்பளத்தையும் கொடுத்தார். ஆனால் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் மட்டும் நடித்துக் கொடுத்தார். மற்றொரு படத்துக்குத் தேதிகள் கொடுக்காமல் இழுத்தடித்தார். இது சம்மந்தமாக ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்தில் புகார் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு என இறங்கினார்.
மேலும் கொரோனா குமார் படத்தில் நடித்து முடிக்காமல் வேறு படத்தில் நடிக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தின் ரெட் கார்டு சிம்பு மீது உள்ளது என்றும் அதை மீறி அவர் எப்படி தக்லைஃப் படத்தில் நடிக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை முடித்துக் கொள்ளலாம் என சிம்பு தரப்பு சொன்னதால் வழக்கைத் திரும்ப பெற்றார். ஆனாலும் சிம்பு தரப்பு கொடுத்த வாக்குறுதியை சிம்பு காப்பாற்றவில்லை.