தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் கம்பேக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
அதே போல கன்னட சினிமாவில் தன்னுடையத் திரை வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக நேஷனல் க்ரஷாக உள்ளார். இருவரும் கீதகோவிந்தம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. இருவரும் அவ்வப்போது ஒன்றாக வலம் வந்து கொண்டிருந்தனர். இருவருமே தங்கள் காதல் கிசுகிசுக்களை அங்கிகரிக்கவோ நிராகரிக்கவோ இல்லை.