ஜோதிகாவை அடுத்து கீர்த்தி சுரேஷின் படம் – கைப்பற்றிய அமேசான் நிறுவனம்

Webdunia
புதன், 13 மே 2020 (16:29 IST)
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படமும் நேரடியாக OTT பிளாட்பார்மில் ரிலீஸாக உள்ளது.

அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து புது படமொன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்  தயாரிக்கிறது. திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடிக்கிறார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். 

கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில்  நடைபெற்று முடிந்தது. அதை அடுத்து பின் தயாரிப்பு வேலைகள் முடிந்து ரிலிஸுக்கு தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்ற நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் நிலையில் படங்களை நேரடியாக ஓடிடி பிளாட்பார்ம்களில் விற்க தயாரிப்பாளர்கள் முயற்சித்து வரும் வேளையில் பெண்குயின் படத்தையும் அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.

ஏற்கனவே ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் இதுபோல ரிலிஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்