இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

vinoth

சனி, 7 ஜூன் 2025 (08:33 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்துள்ள படம் தக் லைஃப். ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  ரவி கே சந்திரன் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜூன் 5 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன். ஆனாலும் முதல் நாளில் இந்த படம் 19 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. எதிர்மறை விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையலாம் என சொல்லப்பட்டது.

எதிர்பார்த்ததைப் போலவே நேற்று வெள்ளிக்கிழமை தக் லைஃப் படத்தின் வசூல் பாதிக்கு மேல் குறைந்துள்ளது. இந்தியாவில் நேற்று தக் லைஃப் ரூ 7.5 கோடி ரூபாய் அளவுக்கே வசூலித்துள்ளது.  அடுத்து இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் இந்தியாவில் 26 கோடி ரூபாய் அளவுக்கு இந்த படம் வசூலித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்