கீர்த்தி சுரேஷ் படத்தின் முக்கிய அப்டேட்

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (17:10 IST)
கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்துவரும் ராங் தி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது செல்வராகவனுடன் சானிக் காயிதம் மற்றும் தெலுங்கில் நிதினுடன் ராங் தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர் நிதின். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ராங் தி. இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தை இயக்குநர் வெங்கி அள்ளுரி இயக்கியுள்ளார்.

 நிதினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ராங்கே டே படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் சிறந்த முறையில் பாடல்களை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தின் இடம்பெற்றுள்ள ஒரு படலை கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளருடன் இணைந்து பாடியிருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பஸ்டே என்ற பாடல் சமூகவலைதளங்களில் வைரலானது.

 
இந்நிலையில், #NaaKanuluYepudu என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை நாளை சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வெளியிட்டார்.

இந்நிலையில் ராங் தி படத்திற்கு இன்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனல் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளானர்.
 இதுகுறித்து  கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ராங் தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும், இப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்