விஜய்க்காக கீர்த்தி சுரேஷ் என்ன செய்தார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 14 ஜனவரி 2018 (20:41 IST)
விஜய்க்காக முக்கியமான விஷயத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்கிறார்கள்.

 
நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், ‘ரஜினி முருகன்’, ‘தொடரி’, ‘ரெமோ’ படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், ‘பைரவா’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். கடந்த வருடம் பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸானது.
 
‘பைரவா’ ரிலீஸாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் மறுபடியும் விஜய் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்காக, தன்னுடைய மற்ற படங்களின் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து, ‘விஜய் 62’ படத்துக்காக மொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்