ஆண்டாள் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் உண்ணாவிரதம்

வெள்ளி, 12 ஜனவரி 2018 (17:10 IST)
‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாளைப் பற்றித் தவறாக எழுதியதாக, கடந்த சில நாட்களாக  கவிஞர் வைரமுத்து மீது காட்டமாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்து மத  வெறியர்களும், பாஜகவைச் சேர்ந்தவர்களும். அதிலும், பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா, தகாத வார்த்தைகளால் வைரமுத்துவைப் பேசியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து சமீபத்தில் நடந்த விழாவில் வைணவ பெண் கடவுள் ஆண்டாள் பற்றி தவறான  வார்த்தையை குறிப்பிட்டு சொன்னதாக பெரும் சர்ச்சையானது. பலரும் இன்னும் இதற்கு எதிராக  குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரின் கருத்துக்கு பிரபல நாட்டுப்புற பாடகியான  விஜயலட்சுமி தன் எதிர்ப்பை தெரிவித்ததோடு உண்ணாவிரதமும் இருந்து வருகிறார். மேலும்  கண்ணீரோடு அவர் கூறியிருப்பதாவது என்னவென்றால், ஆண்டாளை நாங்கள் தாயாக  வணங்குகிறோம். ராஜபாளையம் பகுதியிலேயே ஆண்டாள் கோவில் கொண்டுள்ள இடத்தில் இப்படி வைரமுத்து கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வருத்தம் தெரிவித்துவிட்டால் போதுமா? சன்னதிக்கு நேரடியாக வந்து ஆண்டாள் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணா விரத போராட்டம் தொடரும் என்றும், எனது கணவரும் என்னுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்  என்றும் கூறியுள்ளார்.
 
விஜயலட்சுமி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியையாக, ஆண்டாள் பற்றி 7  ஆண்டுகளாக ஆய்வு கட்டுரை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்