என்னை லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னா திட்டுறாங்க… நயன்தாரா ஆதங்கம்!

திங்கள், 11 டிசம்பர் 2023 (07:01 IST)
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் 75 ஆவது படம் சமீபத்தில் ரிலீஸாகி கலைவயான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படம் ரிலீசான வேளையில் சென்னையை மிக்ஜாம் புயல் சென்னையைத் தாக்கியதால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இதனால் படத்தை விளம்பரப்படுத்த நயன்தாரா ஒரு நேர்காணலை சமீபத்தில் கொடுத்துள்ளார்.

அதில் ” என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள். அப்படி சொன்னாலே பலர் திட்டுகிறார்கள். நான் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லையா அல்லது ஒரு பெண் என்பதால் அப்படி ஒரு பட்டம் இருக்கக் கூடாது என நினைக்கிறார்களா என தெரியவில்லை. ஒரு பத்து பேர் சந்தோஷமாக அப்படி அழைத்தால் 100 பேர் திட்டுகிறார்கள். நான் லேடி சூப்பர் ஸ்டார் என போட வேண்டாம் என சொன்னாலும் யாரும் அதைக் கேட்கவில்லை. ரசிகர்களின் அன்புக்காகதான் அதை நான் ஏற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்