அஜித்தைவிட நான் வயசு கம்மிதான்: கிழவி என்று விமர்சனம் செய்த ரசிகருக்கு கஸ்தூரி பதிலடி

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (09:37 IST)
தன்னை கிழவி என்று கூறிய அஜித் ரசிகர் ஒருவருக்கு தான் என்றால் தன்னை விட ஐந்து வயது அதிகமான அஜித் யார்? என்று கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அஜித் ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கஸ்தூரியின் பழைய திரைப்பட பாடல் ஒன்றை பதிவு செய்து ’இது நம்ம கஸ்தூரி கிழவி தானே, அந்த காலத்தில் சரியான ஃபிகராஅ இருந்திருக்கும் போல என்று பதிவு செய்திருந்தார் 
 
இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி தான் கிழவி என்றால் தன்னை விட ஐந்து வயது அதிகமான அஜித் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளதாவது: எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் அவர்கள் கேட்டாரா? அவர் பேரை சொல்லிக்கிட்டு  அசிங்கமா பேசுங்கன்னு? இதுல காமெடி என்னன்னா, கஸ்தூரி ‘கிழவி’, அஜித்தை விட ஐந்து வயது குறைந்தவர்’ ஹைய்யோ ஹையோ’ 
 
மேலும் இன்னொரு டுவிட்டில் ’அஜித் ஒரு ஜென்டில்மேன் என்றும், அவருடைய புகழுக்கு இழுக்கு ஏற்படும் வண்ணம் அவருடைய ரசிகர்கள் யாரும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவருடைய உண்மையான ரசிகர்கள் உண்மையில் பெருமைப்படத்தக்கவர்கள் அஜித் அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார் 
 
இருப்பினும் இந்த பதிவு காரணமாக அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்