தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என சொல்லப்பட்ட அஜித் பல சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்து தன் வெற்றியை நிலைநாட்டினார். நடிப்பதுடன் நிறுத்தி விடாமல், பைக் ரேஸ் , கார் ரேஸ், போட்டோ கிராபர், துப்பாக்கி சுடுதல் என பல காரியங்களில் தன்னை ஈடுபடுத்தி தொடர்ந்து தனது திறமைகளை வளர்ந்து வருகிறார்.
பல வருடங்களாக படத்தில் நடிப்பதோடு சரி எந்த ஒரு பொது மேடைகளிலும் பங்கேற்பதில்லை. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் நடன கலைஞர்களுக்காக Steps என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று மாசான குத்து டான்ஸ் போட்டு அந்த அரங்கத்தையே அதிரவைத்துள்ளார். இதனை அவரது மனைவி ஷாலினி பார்த்து ரசிக்கிறார். இது பழைய வீடியோவாக இருந்தாலும் இணையத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.